ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு நடந்த சில முக்கிய சம்பவங்கள் குறித்து பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது #ThisHappened2020 என்ற ஹாஷ் டாக்கில் சில பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2020-ல் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் மாஸ்டர் திரைப்படம் NO.1 இடத்தை பிடித்துள்ளது.
மேலும் அதன்பின் வலிமை திரைப்படம் மூன்றாவது இடத்திலும், சூரரை போற்று, தர்பார் 5 மற்றும் 10 இடத்தை பிடித்துள்ளன.
தற்போது இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். மேலும் வலிமை திரைப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் கடந்த வருடம் வெளியாகவில்லை, ஆனாலும் மூன்றாவது பிடித்துள்ளது அஜித் ரசிகர்களின் பலத்தை காண்பிக்கிறது.
30 Views