விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். மேலும் சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ், கவுரி கிஷான், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். 
சமீபத்தில் காதலர் தினத்தன்று விஜய் பாடிய குட்டி கதை பாடலை வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் சென்னையில் நடத்தவும் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் படத்தில் நடித்துள்ள சாந்தனுவும், “மாஸ்டர் குழுவினருடன் விரைவில் கோவைக்கு வருவோம். தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார். விஜய்யின் முந்தைய மெர்சல், சர்கார், பிகில் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில்தான் நடந்தன. தற்போது மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் எனவே தான் கோவைக்கு மாற்றி இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

168 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *