கொரோனா என்ற பெரிய போராட்டத்திற்கு நடுவில் தொடங்கியுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் 4. நேற்று (அக்டோபர் 4) பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் மக்களிடம் அதிகம்.

ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் நிகழ்ச்சியில் இருப்பதால் அவர்களுக்கு கொண்டாட்டம் தான். நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது வரை 2 புரொமோக்கள் வெளியாகிவிட்டது.

ஒன்று பிரபலங்களின் ஆட்டம், பாட்டத்துடன் கூடிய வீடியோ, மற்றொன்று கொஞ்சம் சீரியஸான புரொமோ. இந்த நிலையில் தான் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல சீரியல் நடிகை நுழைந்துள்ளார்.

அவர் வேறுயாரும் இல்லை கடந்த சில நாட்களாகவே கையில் ஒரு பையுடன் ஊர் ஊராக சுற்றி வரும் கண்ணம்மா தான். பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை பை தூக்கிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் காட்சி இடம்பெற்றது.

அந்த காட்சி புகைப்படத்தை வைத்து நடிகையை ஊர் ஊராக சுற்ற வைத்துள்ளனர் ரசிகர்கள். இப்போது அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

8 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *