தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க சர்ச்சைகள் அனைவரும் அறிந்த ஒன்று தான். விஷால் தலைமையிலான அணி பதவியில் இருந்து வந்தனர். கடைசி காலத்தில் இந்த விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
அடுத்த தேர்தல் நீதிமன்ற வழக்கு வரை சென்று பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் டி ராஜேந்தர் தலைமையிலான அணியும், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தலைமையிலான அணியும் போட்டியிட்டது.
அதே வேளையில் தனித்து பதவிக்கு பி.எல்.தேனப்பன் போட்டியிட்டார். நேற்று காலை 8 மணி முதல் தேர்தல் சென்னை அடையாறு எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடைபெற்றது.
கமல் ஹாசன், அர்ஜூன், சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், குஷ்பூ, தேவயானி என பலர் வாக்களித்தனர். பாரதி ராஜா, ரஜினிகாந்த், எஸ்.பி.பி சரண் ஆகியோர் வாக்களிக்க வரவில்லை.
மொத்தமுள்ள 1304 வாக்காளர் எண்ணிக்கையில் 1050 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இதில் இன்று காலை ஓட்டு கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முரளி 557 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
டி ராஜேந்தர் 337 வாக்குகள் மட்டும் பெற்றும், பி எல் தேனப்பன் 87 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.