விஜய்யின் நடிப்பில் மாஸ்டர் படம் தயாராகிவுள்ளது. இவ்வருடம் ஏப்ரல் மாதம் படம் வெளியாகி இருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக இன்னும் வெளியாகவில்லை, அடுத்த வருடம் ஜனவரியில் படம் வெளியாகிவிடும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி நான்காவது முறையாக இணைகிறார்கள் என்றனர். ஆனால் அது சரியாக வரவில்லை, எனவே நெல்சன் விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார் என்றனர்.
இந்த செய்தி உறுதியானது தான் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதோடு இப்பட நாயகியாக தீபிகா படுகோன் பெயரும், வில்லனாக ஜான் ஆப்ரகாம் நடிக்கிறார் என்றும் வதந்திகள் உலா வருகின்றன.
43 Views