இளைய தளபதி விஜய், இந்த பெயருக்கு பின் அவரது கடின உழைப்பு உள்ளது. இப்போது தமிழ் சினிமா கொண்டாடும் அளவிற்கு பெரிய நடிகராக வளர்ந்திருக்கிறார்.

வருடா வருடம் படம் ரிலீஸ் செய்யும் விஜய்யால் இந்த வருடம் படத்தை வெளியிட முடியவில்லை. அடுத்த வருட முதலிலேயே மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டுவிட்டர் பக்கம் எப்போதும் அதிக லைக்ஸ், ரீ டுவிட், அதிகம் பேசப்பட்ட விஷயம் என சர்வே எடுப்பார்கள். அப்படி இந்த வருடத்தில் விஜய் நெய்வேலி ரசிகர்களுடன் எடுத்த செல்பி அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால் இந்த வருடம் அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்டதில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த தகவலை டுவிட்டர் நிறுவனமே வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மீண்டும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

159 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *