சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று ஹோட்டல் அறையில் இறந்து கிடந்துள்ளார். அவர் தற்கொலை தான் செய்துள்ளார் என பல செய்திகள் வந்தன.
இந்த நிலையில் அவரது இறந்த உடல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதைப்பார்த்த பெங்களூரைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. சித்ரா புகைப்படங்களை பார்த்தபோது, முகத்தின் மீது காயங்கள் இருப்பதை கவனிக்க முடிந்தது. இதை வைத்து பார்த்தால் கொலையாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
வேறு யாராவது ஒருவர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, அதை இவர் தடுக்கும் போதுதான் இது போன்ற காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என தினேஷ் ராவ் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
20 Views