டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி மற்றும் லாக்டவுன் காரணமாக இந்தாண்டு கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் ஏதேனும் சில காரணங்களால் கல்லூரியை விட்டு விலகிய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை முழுவதுமாக திருப்பித்தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி நா டு முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு பெரிய பாதிப்பை பொருளாதாரா ரீதியாக ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். பலர் கல்லூரிகளில் சேர்ந்த பின்னர் பல்வேறு காரணங்களால் விலகி வருகிறார்கள், ஆனால் தாங்கள் செலுத்திய கல்விக் கட்டணம் திரும்ப கிடைக்காத சூழலே இப்போது உள்ளது.

பலரும் புகார்கள்

இதுதொடர்பாக பலரும் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். நீதிமன்றத்தை நாடுகிறார்கள். கல்வி கட்டணம் திரும்ப கிடைக்க வேண்டும் பலர் போராடி வருகிறார்கள். இவற்றை கருத்தில் கொண்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தீவிரமாக ஆலோசனை நடத்தியது.

பொருளாதார நெருக்கடி

இந்த சூழலில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யு.ஜி.சி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கலாம்.

கட்டணத்தை திரும்ப தர

எனவே நடப்பு கல்வியாண்டில் (2020-21) கல்லூரிகளில் சேர்ந்து நவம்பர் 30, 2020க்கு முன்பாக விலகி இருந்தாலோ அல்லது வேறு கல்லூரிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தாலோ, அவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும். சேர்க்கைக்கு பின்னர் விலகியதால் இவர்களின் கல்விக் கட்டணத்தில் எதுவும் பிடித்தம் செய்யக் கூடாது.

விலகிய மாணவர்கள்

அதாவது கல்லூரியில் சேர்ந்து விலகிய மாணவர்கள் செலுத்திய முழு கல்விக்கட்டணத்தில் பிரசசிங் கட்டணத்தில் 1000 ரூபாயை மட்டும் பிடித்துக் கொண்டு எஞ்சிய தொகையை தாமதம் இன்றி உடனே திரும்பி தர வேண்டும்” என நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி தனது சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.

198 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *