நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 அன்று, அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும்.

புது டில்லி: தற்போதைய கொரோனா சூழ்நிலையில், இன்று வெளியான நம்பிக்கைக்குரிய மற்றும் ஒரு நல்ல செய்தி இதைவிட வேற எதுவும் இருக்க முடியாது. நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 அன்று, அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, இந்திய விஞ்ஞானிகள் தங்கள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்படுகின்றன.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த ஏற்பாடுகள்:
பாரத் பயோடெக் (Bharat Biotech) உடனான பொதுவான திட்டத்தின் கீழ் புதிய கொரோனா தடுப்பூசி (New Corona Vaccine) தயாராக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர் – ICMR) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். BBV152 COVID Vaccine என்ற பெயரில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி COVID-க்கு எதிராக செயலபடும். இதுதொடர்பாக, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எய்ம்ஸ் உட்பட நாட்டின் 13 மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகளை (Clinical Trials) விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

224 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *