கடந்த 16 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து உயர் கல்வி சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தற்போது கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் 109 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 139 அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், 571 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்வதற்கு நாளை மறுநாள் முதல் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் இம்மாதம் 31-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக மாணவர்கள் பதிவு செய்யலாம். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வழங்க கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரி இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு கல்லூரிகளை பொருத்தவரை, அரசின் இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். http://tngasa.in/ http://tngasa.in/

235 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *