இந்தியாவில் கோவிட்-19-ன் காரணமாக உயிரிழந்தவர்களுள் 82% நபர்களுக்கு இணை-நோய்கள் இருந்திருக்கின்றன உயிரிழந்தவர்களுள் ஏறக்குறைய  70% நபர்களுக்கு ஒரு இணை-நோயாக நீரிழிவு இருந்திருக்கிறது கோவிட்-19 தொற்று ஒரு ஆரோக்கியமான நபரை கூட நீரிழிவு நோயாளியாக ஆக்கிவிடலாம்.  நோயாளியின் இல்லத்திலேயே மருத்துவ ஆலோசனை மற்றும் வழக்கமான பரிசோதனை சேவைகளை வழங்குகின்ற நீரிழிவு நோயாளிகளுக்கான ஹோம் கேர்  திட்டத்தை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தொடங்கியிருக்கிறது 

நவம்பர் 14, 2020:  “இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களுள் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு நீரிழிவு அல்லது நீரிழிவு மற்றும் உயர் இரத்தஅழுத்தம் ஆகிய இரண்டும் இருந்தன என்பதால், இந்த பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் நீரிழிவை கட்டுப்பாட்டில்  வைத்திருப்பதே உகந்தது ”, என்கிறார் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நீரிழிவு சிகிச்சையியல் துறையின் மருத்துவ நிபுணர் டாக்டர். சி.ஆர். மகேஷ் பாபு. கோவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்த நீரிழிவு நோயாளிகளுள் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினருக்கு சரியாக கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு பாதிப்பு இருந்ததாக அவர் மேலும் கூறினார். 
இது தொடர்பான ஆய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டிய டாக்டர். மகேஷ் பாபு, ஆரோக்கியமான நபர்களிடம் புதிதாக நீரிழிவை தூண்டி விடுகின்ற திறன் கோவிட்-19 தொற்றுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.  ஆகவே, தொற்று ஏற்படாமலும், நீரிழிவுக்கு தங்களை ஆளாக்கிக்கொள்ளாமலும்  பாதுகாத்துக் கொள்வதற்காக தனிநபர் தூய்மை, சமூக இடைவெளி மற்றும் கோவிட்-19-க்கான பிற வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றுவது ஆரோக்கியமான நபர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.  
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  2020 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தையொட்டி  அதன்மீது விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் டாக்டர். மகேஷ் பாபு மேற்கண்ட விளக்கத்தை வழங்கினார்.  இந்நிகழ்வின்போது மீனாட்சிமிஷன் மருத்துவமனையின் புதிய திட்டமான “நீரிழிவு நோயாளிகளுக்கான ஹோம் கேர் திட்டம்  ” தொடங்கப்பட்டது.  இச்சேவை திட்ட தொகுப்பில் மருத்துவ ஆலோசனைகள், நீரிழிவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், சிறப்பு வல்லுனர்கள், இயன்முறை மருத்துவ நிபுணர்கள், உணவுமுறை வல்லுனர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் சேவைகள், நோயாகளின் வீடுகளிலேயே வழங்கப்படுகின்றன.  சிறுநீர் பகுப்பாய்வு, உணவு அருந்தாத நிலையில் கொழுப்பு அளவு சோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, சிறுநீரக செயல்பாடு சோதனை மற்றும் தைராய்டு செயல்பாடு சோதனை போன்ற வழக்கமான பரிசோதனைகளுள் உள்ளடங்கும்.   
உலகெங்கிலும் கோவிட்-19 தொற்றின்போது மிக அதிகமாக கண்டறியப்பட்ட, நாட்பட்ட இணை – நோய்களுள் ஒன்றாக நீரிழிவு இருக்கிறது. மேலும்  இந்தியாவில் இன்னும்  அதிகமாக நீரிழிவு நோய்  இருக்கிறது என்று டாக்டர். மகேஷ் பாபு கூறினார்.  இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளுள் சுமார் 82% நீரிழிவு, உயர் அழுத்தம் மற்றும் அதிக உடற்பருமன் போன்ற இணை நோய்கள் தொடர்புடையதாக அறியப்பட்டுள்ளது.  இவற்றுள்  மிகப்பெரிய பங்களிப்பாளராக நீரிழிவு இருக்கிறது.  நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தி நிர்வகித்திருந்தால் மட்டும் உயிரிழந்தவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை காப்பாற்றியிருக்க முடியும்.  
ஏற்கனவே இருந்து வருகின்ற நீரிழிவு நோயானது  கோவிட்-19 தொற்றை  இன்னும் மோசமாக்குவது மட்டுமின்றி, இதுவரை இல்லாத நபர்களுக்கு நீரிழிவு  உருவாவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்று ஊடகவியலாளர்களிடம் டாக்டர். மகேஷ் பாபு தெரிவித்தார்.  கோவிட்-19 தொற்று எப்படி ஆரோக்கியமான நபர்களை கூட  நீரிழிவு நோயாளிகளாக ஆக்குகிறது என்பது இன்னும் தெளிவாக தீர்மானிக்கப்படவில்லை என்றாலும் கூட, கணைய பீட்டா செல்களில் தொற்றினால் விளைவிக்கப்படும் சேதமே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.  இன்சுலின் சுரப்பு அளவை கணைய செல்களில் ஏற்படும் சேதம் பாதிக்கிறது என நம்பப்படுகிறது.  நோயெதிர்ப்பு திறனமைப்பை சீர்படுத்துவதற்காக கோவிட்-19 நோயாளிகளுக்கு தரப்படும் தீவிர ஸ்டீராய்டு சிகிச்சையானது நீரிழிவு பாதிப்புகளை விளைவிக்கும் என்பது மற்றொரு கருதுகோள் இருக்கிறது.  
தனிநபர் தூய்மை, நோயெதிர்ப்பு திறன், மற்றும் அவசியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு, உயர்இரத்த அழுத்தம் மற்றும் அதிக உடற்பருமன் போன்ற நாட்பட்ட வாழ்க்கைமுறை நோய்களை தள்ளி வைப்பதன் முக்கியத்துவத்தை இந்த பெருந்தொற்று பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது என்று டாக்டர். மகேஷ் பாபு கருத்து தெரிவித்தார். நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை நீரிழிவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதே  சிறந்தது  என்பதை அவர் வலியுறுத்தினார். 
இந்தியாவில் 77 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பதாகவும் நீரிழிவு பாதிப்பு புதிதாக ஏற்படுவது அச்சுறுத்தும் விகிதத்தில் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  எனினும், நீரிழிவு இருப்பதாக கண்டறியப்படும் ஒவ்வொரு நபருக்கும், இந்த நிலை கண்டறியப்படாத வேறொருவர் இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் நீரிழிவு பாதிப்பு நிலை 15-18% என்ற அளவிலும் மற்றும் கிராமப்புறங்களில் 6-8% அளவிலும் இருக்கிறது என்று குறிப்பிட்டார். 
உடலுழைப்பு / உடற்பயிற்சி இல்லாமை, மனஅழுத்தம், தவறான உணவுப்பழக்கம் (குறிப்பாக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட அரிசி, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை அதிகளவில் உட்கொள்வது), குறிப்பாக இடுப்பைச் சுற்றி இருக்கும் உடற்பருமன்  மற்றும்  வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவை நீரிழிவிற்கான முக்கிய காரணங்களாகும்.  
நிலைமை மிகவும் தீவிரமாகும் வரை நீரிழிவு இருப்பதற்கான அறிகுறிகள் பொதுவாக தென்படுவதில்லை என்பதால் இதனை ஆரம்பநிலையிலேயே கண்டறிவதற்கான தேவை இருக்கிறது என்பதை டாக்டர். மகேஷ் பாபு வலியுறுத்தினார்.  பாதிப்பு நிலையை கண்டறிகின்ற விகிதத்தை உயர்த்துவதற்காக, நீரிழிவு அறிகுறிகள்  இல்லை என்றாலும் கூட இதற்காக நடத்தப்படும் ஸ்க்ரீனிங் முகாம்களில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும்.  ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பதற்கும்  இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும், ஆரம்பத்திலேயே இதனை அடையாளம் காண்பதும், நோய் உறுதி செய்யப்பட்ட பிறகு அதை மருத்துவ ஆலோசனையின் பேரில் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியமாகும். 
நோயாளியின் இல்லத்திலேயே மருத்துவ ஆலோசனை மற்றும் வழக்கமான பரிசோதனை சேவைகளை வழங்குகின்ற நீரிழிவு நோயாளிகளுக்கான ஹோம் கேர்  திட்டத்தை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தொடங்கியிருக்கிறது—
நீரிழிவு நோயாளிகளுக்கான ஹோம் கேர்  திட்டத்தைப்   பற்றிய விவரங்களுக்கு 77083 53777 / 73588 88222

206 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *