

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் தைப் பொங்கல் அன்று நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்கின்றன.
அடுத்த மாதம் (ஜனவரி) 15 ம் தேதி தைப் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளின் அடிவாரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஞ்சள் ஆவாரம் பூக்கள் தற்போது பூத்துக் குலுங்கி காணப்படுகின்றன.
தைப் பொங்கல் அன்று கூரை பூ, மாவிலை, ஆவாரம் பூ ஆகியவற்றை வைத்து சாமி கும்பிடுவார்கள். மேலும் வீடுகளிலும் வாகனங்களிலும் கோவில்களிலும் விவசாய நிலங்களிலும் இந்தப் பூவை இணைப்பார்கள்.
இந்நிலையில் மருத்துவ குணம் நிறைந்த இந்த ஆவாரம் பூக்களைத் தற்போதே விவசாயிகளும் வியாபாரிகளும் சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
79 Views