வருடாந்திர நிகழ்வான இதில் மெய்நிகர் முறையில் நாடெங்கிலுமிருந்து 10000-க்கும் அதிகமான
சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 30-க்கும் கூடுதலான பிரபல
நிபுணர்களும், பேச்சாளர்களும் இதில் உரையாற்றுகின்றனர்.
• இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார பராமரிப்பு தொழில்நுட்ப கருத்தரங்கான இது, புதிய சுகாதார-
தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி, இன்குபேஷன் (அடைகாப்பு)
பீட்டா -சோதனைகளுக்கான ஒரு செயல்தளத்தையும் வழங்கும் சர்வதேச சுகாதார – தொழில்நுட்ப
கருத்தரங்கான கஹோடெக் 2020, செப்டம்பர் 25-29 தேதிகளில் மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது

டெல்லி / செப்டம்பர் 10, 2020: ஐந்தாவது சர்வதேச சுகாதார பராமரிப்பு – தொழில்நுட்ப கருத்தரங்கான கஹோடெக் 2020 (CAHOTECH), செப்டம்பர் 25-29 தேதிகளில் மெய்நிகர் முறையில் நடைபெறுகிறது. கஹோ (CAHO) அமைப்பு நடத்தும் இந்த ஆண்டுக்கான கருத்தரங்கின் கருப்பொருள் ‘சுகாதார பராமரிப்பின் எதிர்காலம் அதை நிகழச்செய்வது’ என்பதாகும். இந்த வருடாந்திர நிகழ்வானது, இந்நாட்டில் நடத்தப்படுகின்ற மிகப்பெரிய சுகாதார – தொழில்நுட்ப நிகழ்வாக கருதப்படுகிறது. சுகாதார பராமரிப்பு துறையோடு தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் அண்மை தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து, தங்களை நிகழ்நிலைப்படுத்திக் கொள்வதற்காக 1000-க்கும் அதிகமான சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கஹோடெக் 2020 நிகழ்வில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்வார்கள்.
மருத்துவ – தொழில்நுட்ப விற்பனை நிறுவனங்கள், செய்முறை புத்தாக்குனர்கள், தீர்வு வழங்குனர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் முடிவுகளை செய்பவர்கள் மற்றும் புத்தாக்கமான மாறுபட்ட தொழில்நுட்பங்கள் மீது முதலீடு செய்ய விரும்புகின்ற முதலீட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்பாளர்களுள்
உள்ளடங்குவர். இந்த ஆண்டு நடைபெறும் இந்நிகழ்வானது, ஒரு மெய்நிகர் கண்காட்சியையும் மற்றும் மெய்நிகர் கருத்தரங்கையும் கொண்டிருக்கும். சுகாதார துறையில் நிதியளிப்பு மற்றும் பீட்டா பரிசோதனைக்காக முனைப்புடன் தேடும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், 2020 செப்டம்பர் 19-20 தேதிகளில் நடைபெறவுள்ள மெய்நிகர் பிட்ச்ஃபெஸ்ட் நிகழ்விற்காக ரூ.500 என்ற சிறிய கட்டணத்தொகையை செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். சுகாதாரத்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தங்களது சிறப்பான யோசனைகளை அவர்கள்
இந்நிகழ்வில் சமர்ப்பிக்கலாம் மற்றும் ரூ.5 இலட்சம் வரை பரிசுப்பணத்தை வெல்லலாம். 2020 செப்டம்பர் 12
ஆம் தேதி வரை www.cahotech.comல் பங்கேற்புக்கு பதிவு செய்யலாம்.

கஹோடெக் 2020 – ன் அமைப்பு தலைவரும், கஹோ கூட்டமைப்பின் துணைத்தலைவருமான திரு. சமீர் மேத்தா இது தொடர்பாக பேசுகையில், ‘தொழில்நுட்ப உருவாக்குனர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு வழங்கலில் ஈடுபட்டுள்ள பங்காளர்களுக்கு இடையே ஆரோக்கியமான, நேர்மறையான நல்லுறவை உருவாக்க உதவிய நான்கு வெற்றிகரமான இக்கருத்தரங்கு நிகழ்விற்குப் பிறகு, இந்தியாவில் சுகாதார
பராமரிப்பு-தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய நிகழ்வாக இன்றைக்கு கஹோடெக் மதிக்கப்படுகிறது. இந்த
ஆண்டு, ஐந்தாவது கஹோடெக் நிகழ்வானது, அனைத்து புவியியல் எல்லைகள் மற்றும் வரம்புகளைக் கடந்து மெய்நிகர் முறையில் உலகமெங்கும் தனது எல்லைகளை பரப்புகிறது. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்து தொலைநோக்குடன் பார்க்கவும், எதிர்கால தேவைகளை கருத்தில்கொள்ளவும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சுகாதாரத்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை இந்நிகழ்வின் பங்கேற்பாளர்களோடு நெருக்கமாக இது ஒருங்கிணைக்கவிருக்கிறது.’ என்று கூறினார்.

கஹோடெக் 2020 நிகழ்வில் 30-க்கும் அதிகமான புகழ்பெற்ற வல்லுனர்கள் மெய்நிகர் முறையில் பல்வேறு
அமர்வுகள், உரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
டாக்டர் இந்து பூஷன் (சிஇஓ, ஆயுஷ்மான் பாரத்-PMJAY); டாக்டர் கிரிதர் ஜே. கயானி, தலைமை இயக்குனர்,
இந்திய உடல்நல சேவை வழங்குனர்கள் சங்கம்; திருமதி. கிரண் மஜும்தார் ஷா, செயல்தலைவர், பயோகான்
லிமிடெட்; திருமதி. சங்கீதா ரெட்டி, இணை நிர்வாக இயக்குனர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்; டாக்டர் அஜய்
நாயர், சிஇஓ, ஸ்வஸ்த்; திரு. ஜான் மெய்னர்ஸ், தலைவர், தொடர்புடைய பிசினஸ் மற்றும் சுகாதார தீர்வுகள்,
அமெரிக்க இதயவியல் சங்கம்; டாக்டர் குமார் பெலானி, மருத்துவ பேராசிரியர், மயக்கவியல் துறை,
யுனிவர்சிட்டி ஆஃப் மினிசோட்டா ஹெல்த் (யுஎஸ்ஏ); டாக்டர். மோகன் செல்லப்பா, பிரசிடெண்ட் (குளோபல்
வென்ச்சர்ஸ்), ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் இன்டர்நேஷனல்; டாக்டர். தேவி ஷெட்டி, தலைவர் மற்றும்
நிர்வாக இயக்குனர், நாராயணா ஹெல்த்; மற்றும் திரு. அஷுடோஷ் ரகுவன்சி, நிர்வாக இயக்குனர் & சிஇஓ,
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் போன்ற பிரபல ஆளுமைகள் இவர்களுள் சிலராவர்.
கஹோடெக் 2020 நிகழ்வின் அமைப்பு செயலர் திரு. ஜே. அடெல் பேசுகையில், ‘தொழில்நுட்ப புத்தாக்கங்கள்
மீது அதிக கூர்நோக்கம் செலுத்தும் கஹோடெக், உடல்நல பராமரிப்பு தொழில்துறைக்கு புதிய மற்றும்
சிறப்பான தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகம் செய்வதை இலக்காக கொண்டிருக்கிறது. உடல்நல பராமரிப்பு தொழில்நுட்பத்தில் அண்மை கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் பற்றி உடல்நல பராமரிப்பை வழங்குபவர்கள் கற்றுக்கொள்வதற்கும் மற்றும் ஐடி, மருத்துவ சாதனங்கள் / இயந்திரங்கள் மற்றும் செய்முறைகள் துறையில்
எதிர்கால போக்குகளுக்கு தயாரானவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் ஒரு தனிச்சிறப்பான செயல்தளத்தை
இது வழங்குகிறது. உடல்நல பராமரிப்பை தொழில்நுட்பத்தோடு இணைக்கும் இந்நிகழ்வானது, நவீன உடல்நல பராமரிப்பை அனைவரும் பெறுமாறு எளிமையானதாக, கிடைக்கத்தக்கதாக ஆக்குவதற்கான தீர்வுகளையும் நுட்பமாக பரிசீலிக்கிறது. ஆரம்ப நிலைகளிலேயே நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பத்தை
அடையாளம் காண சுகாதார – தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முலீட்டாளர்களை ஒரே
தளத்தில் பிட்ச்ஃபெஸ்ட் நிகழ்வு கொண்டு வருகிறது. இதன்மூலம் அவர்கள் தங்களது செயல்பாடுகளை உயர்த்தவும், வளரவும் அவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குகிறது,” என்று கூறினார்.

கஹோ அமைப்பின் பொது செயலர் டாக்டர் லல்லு ஜோசப் பேசுகையில், “ஒருங்கிணைந்த அனுபவத்தை
பகிரவும், பயன்படுத்தவும் சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்துறைக்கான ஒரு தளமாக கஹோடெக் 2020 திகழ்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, அதிக திறன்மிக்க நடைமுறைகளை நோக்கி தொடர்ச்சியாக முன்னேற இது வழிகாட்டுகிறது. ஒவ்வொரு நாளும், இந்நாட்டைச் சேர்ந்த மற்றும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் பல்வேறு தலைப்புகள் பற்றி உரையாற்றுவார்கள் மற்றும் கலந்துரையாடுவார்கள். டெலிமெடிசினை விரைவாக ஏற்று செயல்படுத்துவது; கற்றலின் எதிர்காலம் – ஒரு அதிரடி மாற்றம்; இணைக்கப்பட் சிகிச்சை பராமரிப்பு – புதிய கண்டுபிடிப்புகள்; சீர்குலைவு மற்றும் புத்தாக்கம்;
எதிர்கால மருத்துவமனைகள் – மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவிற்கான அடுத்த தலைமுறை சுகாதார சேவை ஆகியவை இத்தலைப்புகளுள் சிலவாகும். மருத்துவர்கள், மருத்துவமனை மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உயிரி-மருத்துவ பொறியியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உடல்நல பராமரிப்பில் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றம் வழியாக மாற்றத்தை கொண்டுவருவதில் ஆர்வமுள்ள சுகாதார
தொழில்துறையின் பிற அக்கறைப் பங்காளர்களுக்கு எதிர்கால சுகாதார பராமரிப்பு தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவ அதிக கூர்நோக்கம் கொண்டதாக இந்நிகழ்வு இருக்கும்,” என்று கூறினார்.

இக்கருத்தரங்கிற்கு உறுப்பினர்கள் ரூ.500 என்ற கட்டணத்தொகையையும் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள்
ரூ.1000 என்ற கட்டணத்தையும் செலுத்தி www.cahotech.com என்ற வலைதளத்தில் பிரதிநிதிகளாக பதிவு செய்துகொள்ளலாம். CAHO குறித்து (www.caho.in ) வளர்ந்து வருகின்ற எண்ணிக்கையில் NABH, NABL மற்றும் JCI அங்கீகாரங்களை பெறுகின்ற சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கின்ற நிலையில் இந்த அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு

மத்தியில் தகவல் பரிமாற்றத்தை ஏதுவாக்குவதற்கும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் தர அளவுகோள் நிலைகளை வழங்குவதற்கும், தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு பொது செயல்தளத்திற்கான தேவை இருந்து வந்தது. இத்தேவையை பூர்த்தி செய்வதற்காகவே இலாபநோக்கற்ற ஒரு சங்கமாக, அங்கீகாரம் பெற்ற சுகாதார பராமரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (CAHO) என்ற பெயரில்
உருவாக்கப்பட்டது. இந்நாட்டில் NABH மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு சிறந்த தளத்தை CAHO வழங்குகிறது. அத்துடன், இத்தகைய அங்கீகாரங்களைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மேற்கொள்ளும் பயணத்தில் இது அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுகிறது.
மேலும், உடல்நல பராமரிப்பு சிகிச்சை வழங்கலில் பாதுகாப்பான நடைமுறைகளை செயல்படுத்துவது மீது விழிப்புணர்வையும் இது உருவாக்கி வருகிறது.About CAHO ( www.caho.in)

25 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *