இந்திய சில்க் மார்க் நிறுவனம் சார்பாக உயர்தர கைத்தறி பட்டு புடவைகளின் தேசிய அளவிலான சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

தேசிய அளவிலான இந்த சில்க் மார்க் கண்காட்சி, இம்மாதம் 31 ம் தேதி வரை நடக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் இந்தியாவின் தலைச்சிறந்த பட்டு ரகங்களான காஞ்சிபுரம், சேலம், திருபுவனம், பெங்களூர், மைசூர், போச்சம்பள்ளி, தர்மாவரம், பனாரஸ், பெங்கால், சந்தேரி, முசிதாபாத், அசாம் சாலக்குச்சி, பாகல்பூர் இதர காஷ்மீர் பிரிண்ட் சேலைகள் மற்றும் அனைத்து பட்டாடைகளும் கிடைக்கும்.

இந்திய சில்க் மார்க் நிறுவனமானது மத்திய பட்டு வாரியம், ஜவுளி அமைச்சகம், இந்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு சங்கமாகும். இச்சங்கமானது கடந்த 10 ஆண்டுகளாக இக்கண்காட்சியை நடத்தி வருகிறது. இதுவரை 110க்கும் மேற்பட்ட சில்க் மார்க் கண்காட்சியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தியுள்ளது.

சில்க் மார்க் லேபிள் 100% தூய பட்டிற்கு மட்டுமே உத்திரவாதம் அளிக்கும் ஒரு தர முத்திரையாகும். இக்கண்காட்சியில் இடம்பெறும் கடைகள் அனைத்தும் இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் அங்கத்தினர் ஆவர். மேலும் இங்கு விற்பனை செய்யப்படும் சேலைகள், பட்டாடைகள் அனைத்தும் 100% தூய பட்டாகும். இதன் மூலம் இந்திய சில்க் மார்க் நிறுவனம், சில்க் மார்க் அங்கத்தினர்களுக்கு ஒரு வாய்ப்பையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தூய பட்டாடைகள் கிடைப்பதற்கும் வழிவகை செய்கிறது என்றார் சில்க் மார்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.கோபால்.

இக்கண்காட்சியில் நுகர்வோர் தூய பட்டிற்கு உறுதியளிக்கும் சில்க் மார்க் முத்திரையுடன் பட்டாடைகளை வாங்க முடியும். மேலும் அவர் வாடிக்கையாளர்கள் பட்டினைப் பற்றி அறிந்து கொள்ளவும், தாங்கள் வாங்கு பட்டை பரிசோதித்துக் கொள்ளவும் தனியாக முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தியா பட்டு உற்பத்தியில் 2வது இடத்தில் இருந்தாலும் உலகளவில் பட்டை அதிகமாக உபயோகிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக பட்டுச் சேலைகள்தான் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இன்றளவும் இந்தியாவில் பட்டுச் சேலைகள் கைத்தறியில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்றும் இதர பட்டு ரகங்கள் விசைத்தறியிலும் கைவினை பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டுத்தொழில் 25 மாநிலங்களை சேர்ந்த 59 ஆயிரம் கிராமங்களில் சுமார் 80 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது என்றார் அவர்.

174 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *