டிசம்பர் 24,2020: இதயத்தின் செயல்பாட்டைமேற்கொள்கின்ற இம்ப்பெல்லா எனும் மெக்கானிக்கல் இதய பம்ப்பின் உதவியோடுஆஞ்சியோபிளாஸ்டி என்று சொல்லப்படும் இதய அறுவைசிகிச்சையினை வெற்றிகரமாகசெய்திருக்கும் தென்தமிழ்நாட்டின் முதல் மருத்துவமனை என்ற பெருமையினை மீனாட்சிமிஷன்  மருத்துவமனைபெற்றிருக்கிறது.   ப்ரொடெக்டட்  PCI (Protected PCI) எனஅறியப்படும்  செயல்முறையானது, மதுரைமீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை இதயவியல்அறுவைசிகிச்சையாளர் டாக்டர். R. சிவக்குமார் தலையிலான குழுவால் 77 வயதான ஒருமூதாட்டிக்கு டிசம்பர் 18 ஆம் தேதியன்று செய்யப்பட்டது.  இந்நோயாளி, பாதிப்பிலிருந்துமுழுமையாக மீண்டிருப்பதோடு, அவரது வழக்கமான வாழ்க்கையை மீண்டும் நடத்தும் அளவிற்குதேவையான உடற்தகுதியை இப்போது கொண்டிருக்கிறார். இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகுபொருத்தப்பட்டிருந்த இம்ப்பெல்லா அகற்றப்பட்டது.  நுழைக்கும் போதும் அகற்றும் போதும் 4.62மி.மீ. விட்டத்துடன்  இருக்கும்  உலகின்  மிகச்சிறிய  இதய பம்ப்பான இது,க்ராயின் ஆர்ட்டெரியின்  ( groin artery ) மூலம்நுழைக்கப்பட்டது.  கால்சிபிகேஷன் மற்றும்தமனிகளில் கடுமையான அடைப்பு ஆகிய காரணிகளால் இதயமானது மிகவும் பலவீனமாக இருக்கின்றஒரு நோயாளிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்படுமானால், அது  இதய செயல்பாடுநின்றுவிடுமாறு செய்து உயிரிழப்பை விளைவிக்கக்கூடும்.  ஆஞ்சியொபிளாஸ்டியின்போது ஏற்படுகின்ற உயிரிழப்பு விகிதத்தை 25 சதவிகிதத்திற்கும்அதிகமானதிலிருந்து, 5 சதவிகிதத்திற்கும் குறைவான அளவிற்கு இம்ப்பெல்லா என்றமெக்கானிக்கல் பம்ப்பால் குறைக்க முடியும்.  அறுவைசிகிச்சையின்போது இதயத்தின் செயல்பாடுகளைதற்காலிகமாக  மேற்கொண்டு நோயாளியின்இதயம் ஓய்வெடுப்பதற்கும்  மீண்டு வருவதற்கும்இம்ப்பெல்லா உதவுகிறது.  தேவைப்படும்போது,அறுவைசிகிச்சைக்குப் பிறகு 7 நாட்கள் வரை இதயத்தின் செயல்பாட்டை இந்த பம்ப்பால்மேற்கொள்ள முடியும்.   புதிய இம்ப்பெல்லாகருவியின் உதவியோடு செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சை பற்றி கருத்து தெரிவித்த மதுரை,மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். குரு சங்கர்,பலவீனமான மற்றும் செயலிழந்து வருகின்ற இதயத்தைக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்குஒரு வரப்பிரசாதமாக இம்ப்பெல்லா கருதப்படுகிறது என்று கூறினார்.  “ஆஞ்சியோபிளாஸ்டி போன்றமிக குறைவான கூடுருவலுடன் கூடிய அறுவைசிகிச்சை கூட இத்தகைய நோயாளியின் இதய செயல்பாட்டைநிறுத்திவிடக்கூடும். ஆனால் இம்ப்பெல்லாவின் மூலம் இந்த இடரானது கணிசமாககுறைக்கப்படுகிறது. யுஎஸ் மற்றும் ஐரோப்பாவில் இம்ப்பெல்லா, கடந்த சில  ஆண்டுகளாகவேபயன்பாட்டில் இருந்து வருகிறது.  ஆனால், இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில்தான் இதற்குஒப்புதலளிக்கப்பட்டது.    சென்னையில் ஒருமுறைமற்றும் வேலூரில் மற்றொரு முறை என இரு அறுவைசிகிச்சைகள் இம்ப்பெல்லாவின் உதவியோடுதமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற போதிலும், தென்தமிழ்நாட்டிலுள்ளஒரு மருத்துவமனை இதை வெற்றிகரமாக நிகழ்த்தியிருப்பது இதுவே முதன்முறையாகும்,”என்று டாக்டர் குரு சங்கர் மேலும் கூறினார்.  இது பற்றி மேலும்விளக்கமளித்த டாக்டர். R. சிவக்குமார், “2012 ஆம் ஆண்டிலிருந்தே இதயநோய்பாதிப்பு இருப்பதாக அறியப்பட்ட இந்த நோயாளிக்கு அவரது  கரோனரி தமனியில்  கால்சிபிகேஷன் காரணமாககடுமையான அடைப்பு உருவானது.  இத்தகைய நிலையில், மெக்கானிக்கல் முறையில் இரத்தசுழற்சிஇல்லாமல் ஆஞ்சியோபிளாஸ்டியை செய்வது பேராபத்தாக அமையக்கூடும்.  ஆகவே, இம்ப்பெல்லாஉதவியோடு மேற்கொள்ளப்பட்ட ப்ரொடெக்டட்  PCI சிகிச்சை முறையை நாங்கள் தேர்வு செய்தோம்.  ஆஞ்சியோபிளாஸ்டிசெய்வதற்கு முன்பு, இந்த இதய பம்ப்பை நாங்கள் அப்பெண்மணியின் உடலில் பொருத்தினோம்.  இன்ட்ராகரோனரிலித்தோட்ரிப்சி என்ற முறையைப் பயன்படுத்தி, கால்சிய அடைப்பை நாங்கள் அகற்றினோம்.  இந்த ஒட்டுமொத்தசிகிச்சை செயல்முறையும் இன்ட்ராகரோனரி இமேஜிங் வழிமுறையின் கீழ் செய்யப்பட்டது,”என்று கூறினார்.   இது பற்றி மேலும்விளக்கமளித்த டாக்டர். R. சிவக்குமார்,“குறைவான ஆற்றலை பயன்படுத்துகின்ற வேளையில் அதிக இரத்தத்தை உடலுக்கு வெளியில்அனுப்புவதற்கு பெருநாடியில் இதய பம்ப் வைக்கப்படுகின்றபோது, அதனை விரிவாக்கவும் சுருக்கவும் பெருநாடி பலூன் பம்ப்பை பயன்படுத்துவதே பாரம்பரிய வழிமுறையாகஇருக்கிறது.  இது, மோட்டார் இயக்கம் இல்லாத துடிப்புமுறை பம்ப்பாகும்.  அதிகஇடர்வாய்ப்புள்ள ஆஞ்சிபிளாஸ்டியின்போது இதயத்தின் செயல்பாடு நின்றுவிடுமானால்,இதனால் எந்த பயனும் இருக்காது” என்று கூறினார்.  ஆனால், இம்ப்பெல்லாஎன்பது, தொடர்ச்சியான ஆக்சியல்  ஃபுளோ பம்ப்பாகும்.  இதயத்தின்  பம்ப்பிங் செயல்பாட்டிற்கு தற்காலிகமாகஉதவக்கூடிய ஒரு இதய பம்ப்பாக இது இருக்கிறது.  உடலுக்குள் ஊடுருவுகின்ற அல்லது மிகக்குறைவாகஊடுருவுகின்ற இதயவியல் அறுவைசிகிச்சையை இம்ப்பெல்லா பாதுகாப்பானதாக  ஆக்குகிறது.    இதயம்  செயல்பாட்டினைநிறுத்தும்போது கூட இந்த மெக்கானிக்கல் சாதனமானது, இதயத்திலிருந்து இரத்தம் பம்ப்செய்யப்படுவதை உறுதிசெய்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளின் இயல்பானசெயல்பாடுகளுக்கு ஆதரவளித்து , இதயம் மற்றும் இரத்தநாளங்களில் நிலையான இரத்தம்பாய்வதையும் இது உறுதி செய்கிறது.   “கார்டியோஜெனிக்அதிர்ச்சியினால் (AMI-CS) சிக்கலாகும்  மாரடைப்போடு மருத்துவமனையில் ஏற்படும் உயிரிழப்பானது 55% -85% – க்கு இடைப்பட்டதாகஇருக்கிறது” என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இதய அறுவைசிகிச்சையியல்துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். N. கணேசன் கூறினார்.  “55சதவிகிதம் என்ற உயர் உயிரிழப்பு விகிதத்தைக் கொண்ட இந்த நோயாளிகளுக்கான சிகிச்சைநடைமுறையில், இரத்தஅழுத்தத்தை மேம்படுத்துவதற்காக வாசோபிராஸர்கள் மற்றும்ஐனோட்ரோப்களுடன் சேர்த்து உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதுதான், இந்த  இதயபம்ப் பொருத்தும் முறை கண்டறியப்படுவதற்கு முன்பு வரை இருந்தது.  இடது இதயஅறையின் செயலிழப்பே இந்த அதிர்ச்சிக்கான காரணமாக இருக்குமானால், அதை  சரிசெய்வது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இம்ப்பெல்லா பம்ப்களைப் பயன்படுத்தி அதிவேகமான இதய அறைக்கான இதய இரத்தஓட்டஆதரவானது, சிகிச்சை விளைவுகளை சிறப்பாக மேம்படுத்தும். இச்சாதனத்தை வெளியே எடுக்கும் வரை 88 சதவிகிதம் என்ற அளவிற்கும்,மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும்வரை 84 சதவிகிதம் என்ற அளவிற்கும்உயிர்பிழைக்கும் விகிதம்  இருக்கக்கிறது.  இதன் மிகப்பெரிய ஆதாயமாக இருப்பதுபாதுகாப்பு.  அதிக ஆபத்துள்ள சிகிச்சை செயல்முறைகளின்போது நோயாளிகள்பாதுகாப்பாக இருப்பதற்கு இச்சாதனம் உதவுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். இதன்மூலம் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் குறைவாக இருப்பதோடு ஏற்படக்கூடியசிக்கல்களும் குறைவாகவே இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.   இம்ப்பெல்லா மூலம்ப்ரொடெக்டட்  PCI என்பது, கடுமையானகரோனரி தமனி நோய் மற்றும் நீரிழிவு, இதய செயலிழப்பு, முதிர்ந்த வயது, சிக்கலானபுண்கள், நிலைப்புத்தன்மையற்ற, குருதியியக்க செயல்பாடுகள்  ஆகியவை  இருக்கின்ற நோயாளிகளிடம்,அதிக இடர்வாய்ப்புள்ள ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்கு முன்னதாக மேற்கொள்ளப்படுகின்றஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை செயல்முறையாக மாறி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகிறது.

181 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *