கோவிட்-19 தொற்றுக்கு எதிராக மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குவதன் மூலம் இந்தியாவின் அதிக பாதுகாப்பான மருத்துவமனையாக உருவெடுத்திருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ‘ஆறு கட்ட மிக அதிக பாதுகாப்பு செயல்திட்டம்’ என்பதை இம்மருத்துவமனை அறிமுகம் செய்திருக்கிறது
வெளியிலிருந்து கொள்முதல் செய்யாமல் N-95 முகக்கவசங்களை சுயமாகவே தயாரிக்கும் இந்தியாவின் ஒரே மருத்துவமனை இதுவே
கோவிட்-19 பரிசோதனைக்காக RT-PCR, TruNAAT, மற்றும் CB NAAT என்ற மூன்று மாறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிற தமிழ்நாட்டின் ஒரே மருத்துவமனை இதுவே

14 ஆகஸ்ட், 2020: தொடர்பு கொள்ளாமலேயே கோவிட்-19 வைரஸ் தொற்று நபர்களை கண்டறிவது, மருத்துவமனைக்குள்ளே 100% தொற்றில்லா தூய்மைநிலை மற்றும் உடல்நல சிகிச்சை சேவைகளை வழங்கும்போது மிகக்குறைவான உடல்ரீதியான தொடர்பு ஆகியவற்றை முழுமையாக உறுதிசெய்கிற ‘ஆறு கட்ட மிக அதிக பாதுகாப்பு செயல்திட்டம்’ (Six-stage ultra-safety program) என்ற பெயரில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் வழியாக, தனது நோயாளிகள், மருத்துவமனைக்கு வருகைதரும் பார்வையாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என அனைவருக்கும் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக சாத்தியமுள்ள மிக அதிக பாதுகாப்பை இது உறுதிசெய்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவிலேயே கோவிட்-19 தொற்றுக்கு எதிராக அதிகப் பாதுகாப்புள்ள மருத்துவமனை என்ற பெருமைக்குரிய அமைவிடமாக இது உருவெடுத்திருக்கிறது.

தற்போது, சொந்தமாகவே N-95 முகக்கவசங்களை இந்நாட்டில் தயாரிக்கிற ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை திகழ்கிறது; கோவிட்-19 பரிசோதனைக்காக RT-PCR, TruNAAT, மற்றும் CB NAAT என்ற மூன்று மாறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிற தமிழ்நாட்டின் ஒரே மருத்துவமனையாகவும் தனித்துவ சிறப்பு தகுதியை இது பெற்றிருக்கிறது.

அறுவைசிகிச்சை அரங்குகளில் பணியாற்றுகிற மருத்துவ பணியாளர்களுக்கு அழுத்தம் செய்யப்பட்ட, மருத்துவ தரத்திலான காற்றை ஒரு முகப்பு மூடி (hood) வழியாக பாதுகாப்பாக வழங்குவதற்கு தஞ்சாவூர் காற்று தடை செயல்உத்தி (TABT) என அழைக்கப்படும் ஒரு சிறப்பான புத்தாக்க கண்டுபிடிப்பையும் இம்மருத்துவமனை செய்திருக்கிறது. இம்மருத்துவமனையின் மற்றொரு சொந்த, மேம்பட்ட கண்டுபிடிப்பான இதன் ப்ளூடூத் ஸ்டெதாஸ்கோப், ஒரு ஸ்டெதாஸ்கோப்பை தொடாமலேயே – நோயாளி வேறொரு அறையில் அமர வைக்கப்பட்டிருக்கும்போது கூட, அவரின் உடலுறுப்புகள் செயல்பாட்டை மருத்துவர்கள் செவிமடுப்பது அனுமதிக்கிறது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை குழுமத்தின் தலைவர் டாக்டர். S. குருசங்கர், இந்த ‘ஆறு கட்ட மிக அதிக பாதுகாப்பு செயல்திட்டம்’ குறித்து பேசுகையில், “கோவிட்-19 தொற்று பரவல் பற்றி எந்த அச்சமும் இல்லாமல் எமது மருத்துவர்களும், மருத்துவ துணைப் பணியாளர்களும் மற்றும் பிற நிர்வாக பணியாளர்களும், நோயாளிகளுக்கு அவசியமான உடல்நல சேவைகளை வழங்குவதற்காகவும் மற்றும் வேறுபிற நோய் பாதிப்புகளுக்காக தொடர்ந்து சிகிச்சை அவசியப்படுகிற உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் உரிய சிகிச்சையை பெறும் வகையில் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பல அடுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பதே இந்த செயல்திட்டம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமாகும்,” என்று கூறினார்.

‘ஆறு கட்ட மிக அதிக பாதுகாப்பு செயல்திட்டம்’, எமது வருகையாளர்களிடம் தொற்று அறிகுறிகளை அவர்களிடம் எந்த தொடர்பையும் கொள்ளாமலேயே கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்துகிறது. எங்கெல்லாம் சாத்தியமிருக்கிறதோ மற்றும் விரும்பப்படக்கூடியதோ அங்கும் இத்தகைய முறையில் தொடர்புகளே இல்லாமல் பரிசோதனை செய்யவும் மற்றும் சிகிச்சை வழங்கவும் இது வகை செய்கிறது.

இத்திட்டத்தின் முதல்கட்ட பாதுகாப்பு ‘ஸ்மார்ட் செக்யூரிட்டி’ (அறிவார்ந்த பாதுகாப்பு பணியாளர்கள்) ஆகும். மருத்துவமனையின் நுழைவாயிலேயே, வைரஸ் தொற்றைக் கொண்டிருக்கும் சாத்தியமுள்ள நபர்களை கண்டறிவதற்காக பாதுகாப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை இது குறிக்கிறது. தொலைதூரத்திலிருந்தே வருகையாளர்களின் உடல்வெப்ப நிலையை பரிசோதித்து அறிவதற்காக ஸ்மார்ட்டான இன்ஃப்ராரெட் AI தலைக்கவசங்களை அவர்கள் அணிந்திருக்கின்றனர். இரண்டாவது கட்ட பாதுகாப்பு, மருத்துவமனையில் வரவேற்பு பகுதியில் இயங்குகின்ற ஸ்மார்ட் ஃபீவர் கிளினிக் (காய்ச்சல் கிளினிக்)-லிருந்து கிடைக்கிறது. தெர்மல் இன்ஃப்ராரெட் கன்ஸ் சாதனங்களை பயன்படுத்துகிற மருத்துவமனை பணியாளர்கள், வருகையாளர்களின் உடல்வெப்பநிலையை பரிசோதிக்கின்றனர் மற்றும் அவர்களது கைகள் சானிட்டைஸரால் தூய்மையாக்கப்பட்டிருப்பதையும் மற்றும் N95 முகக்கவசங்களை அவர்கள் அணிந்திருப்பதையும் உறுதிசெய்தபிறகு அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள டேகுகளை வழங்குகின்றனர்.

மூன்றாவது கட்ட பாதுகாப்பு என்பது ஸ்மார்ட் தெர்மல் முறையிலான கண்காணிப்பு கேமராக்களை உள்ளடக்கியது. 24 மணிநேரமும் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாகவும் மற்றும் தொலைதூரத்தில் இருந்தவாறும் பரிசோதித்து கண்காணிக்கிறது. நான்காவது கட்ட மிக அதிக பாதுகாப்பு, நோயாளிகளுக்கும் மற்றும் வருகையாளர்களுக்கும், மூன்று மாறுபட்ட, மேம்பட்ட தொழில்நுட்பங்களான RT-PCR, Tru NAAT, மற்றும் CB NAAT என்பவற்றை பயன்படுத்தி கோவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிற நவீன கோவிட்-19 பரிசோதனை சாதனங்களிலிருந்து கிடைக்கிறது.

ஐந்தாவது கட்ட பாதுகாப்பு, 24×7 முறையில் தொடர்ந்து நகர்விலேயே இருக்கிற ரோபோக்களிடமிருந்து கிடைக்கிறது. அடிக்கடி தொடப்படுகின்ற சுவர், தரைப்பரப்பு மற்றும் சாதனங்களின் மேற்பரப்புகள் ஆகியவை அனைத்து நேரங்களிலும் அடிக்கடி சானிட்டைஸர் திரவத்தால் தூய்மையாக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் தொற்றுநீக்கி திரவத்தை தெளிப்பதற்கும், தூய்மையாக்குவதற்கும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நோயாளிகளின் உள்ளார்ந்த உருப்புகளின் சப்தங்களுக்கு செவிமடுக்க இம்மருத்துவமனை ப்ளூடூத் ஸ்டெதாஸ்கோப்பையும் பயன்படுத்துகிறது. அறுவைசிகிச்சை அரங்குகளில் மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் மாசுபடாத தூய்மையான ஆக்ஸிஜனை வழங்குகிற TABT செயல்உத்தியையும் இது பயன்படுத்துகிறது.

மார்ச் மாதத்தில் முதன்முதலாக, கோவிட்-19 தொற்றுப்பரவலின் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டவுடனேயே இப்பணிக்கான ரோபோக்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகள் / சாதனங்களை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இறக்குமதி செய்தது என்று டாக்டர். குருசங்கர் தெரிவித்தார். “அந்த காலகட்டத்தில், மதுரையில் ஒரேவொரு கோவிட்-19 நேர்வுகூட இருக்கவில்லை. ஆனால், இந்த பெருந்தொற்றானது காலப்போக்கில் மதுரையிலும் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனது தாக்குதலை தொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இத்தாலி நாட்டிலும், அமெரிக்காவிலும் என்ன நிகழ்ந்ததோ, அந்த இந்தியாவில் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்கவில்லை. ஆகவே, இடைப்பட்ட இந்த இரண்டு – மூன்று மாதங்கள் காலஅளவை இந்த நவீன, ஸ்மார்ட் சாதனங்களை இறக்குமதி செய்யவும், அவற்றை நிறுவவும் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கவும் நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டோம்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை, தஞ்சாவூரில் உள்ள மருத்துவர்கள் குழு TABT-ஐ வடிவமைத்தது மற்றும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக ப்ளூடூத் ஸ்டெதாஸ்கோப்பையும் வடிவமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ‘ஆறு கட்ட மிக அதிக பாதுகாப்பு செயல்திட்டம்’, கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காலத்தில் மன அழுத்தமோ, அச்சமோ இல்லாத மற்றும் ஸ்மார்ட்டான சூழலில் மருத்துவ பராமரிப்பு சேவைகள் தடங்கலின்றி தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கு இந்நாட்டில் இவ்வாறாக ஒரு முன்மாதிரி தரநிலையை நிறுவியிருக்கிறது.

169 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *