டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,67,372 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,92,39,671. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 15,75,810. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,79,94,611. உலக நாடுகளில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக மிக உச்சமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் நாள்தோறும் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. ஒருநாள் கொரோனா மரணங்கள் தற்போது 3,000த்தை தாண்டியதாக உள்ளது

2-வது இடம்

அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31, 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 97,67,372 அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மரணங்கள்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 412 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,41,772 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,725 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 92,53,306. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3,72,293 மட்டும் என்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம்.

மகாராஷ்டிரா முதலிடம்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,64,348. கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,902 ஆகவும் உயர்ந்துள்ளது.

119 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *