28-12-2020 திங்கள் காலை 10-30 மணியளவில் தமிழ் நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை (திருவள்ளுவர் மாவட்டம்) தமிழ் நாடு திருவள்ளுவர் தமிழ்க்கலை இலக்கியச்சங்கமும், பட்டாபிராம் வியாபாரிகள் நலச்சங்கமும் இணைந்து நடத்திய “ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா 1” பட்டாபிராம் “வசந்தம் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.தலைமை உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை திருமதி சந்தான லட்சுமிஅவர்களும் முன்னிலை திரு கோ.வாசுதேவன் (எ) வயலை பாரதி வாசன் அவர்களும் சங்க நிறுவுநர்,பொதுச்செயலாளர், அறக்கட்டளை நிருவாக இயக்குநர், இலக்கியத்தென்றல் மாத இதழின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளரும், முன்னிலை பட்டாபிராம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.பி.தங்கத்துரை அவர்களும் பங்கேற்ற நிகழ்வில் சங்க செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் மேலும் இந்நிகழ்வில் தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.. 

179 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *