இந்தியா அணுஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்தது. முதன்முதலாக பிரிதிவி என்ற ஏவுகணையில் மாதிரி அணுஆயுதத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது.

இந்தியா அணுஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்தது. முதன்முதலாக பிரிதிவி என்ற ஏவுகணையில் மாதிரி அணுஆயுதத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1837 – தாமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1921 – ஜார்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது. * 1925 – சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. * 1932 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார். * 1945 – இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

* 1948 – செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. * 1956 – சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார். * 1980 – சூரினாமில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. * 1986 – பிலிப்பைன்ஸ் அதிபர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அதிபரானார்.

205 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *