அக்டோபர் 19, 2020 திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் எலைட் பள்ளிக் குழுமம், காந்தி உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளை சார்பாக பனை விதை நடவுத் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு எல்லாபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் திரு. K. ரமேஷ் அவர்கள் தலைமைத் தாங்கினார்.  துணைப் பெருந்தலைவர் திரு K. சுரேஷ். ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி. ஜெயலட்சுமி குமார், திரு. தட்சணாமூர்த்தி மற்றும் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. காயத்ரி உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. அகஸ்டின் ராஜ் மற்றும் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
அனைவரையும் வரவேற்று எலைட் பள்ளிக் குழுமத்தின் முதன்மை நிர்வாகி முனைவர் பால் செபாஸ்டியன் அவர்கள் அன்பாடை போர்த்தி கௌரவித்தார்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக பனைப் பொருட்கள் கண்காட்சி துவிக்கிவைக்கப்பட்டது. பனையின் மூலம் இவ்வளவு பொருட்களை செய்ய முடியுமா என பொதுமக்கள் வியந்து அதனைக் கண்டு களித்தனர்.
பனையின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள் ஊராட்சி பணியாளர்கள் தன்னார்வலர்கள் எலைட் பள்ளி குழுமத்தின் ஆசிரியப் பெருமக்கள் அவர்களோடு பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

123 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *