பெங்களூர்: பெங்களூர், சர்ஜாப்பூர் மெயின் ரோட்டில், விப்ரோ கார்பொரேட் அலுவலகம் அருகே அமைந்துள்ள மனா ஃபாரெஸ்டா (Mana Foresta) காட்டில் வாழும் இயற்கை உணர்வை வழங்கும் வகையில், அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தனமான நகர வாழ்க்கைக்கு இடையே, வனத்திற்கு நடுவே வசிக்கும் உணர்வை யார்தான் விரும்ப மாட்டார்கள். அந்த விருப்பத்தை பூர்த்தி செய்கிறது, மனா ஃபாரெஸ்டா.

சர்ஜாப்பூர் சாலையில் அதிநவீன வகையிலான 3 மற்றும் 4 படுக்கை வசதி கொண்ட குடியிருப்புகளை வழங்குகிறது மனா ஃபாரெஸ்டா. இந்தியாவின் முதலாவது செங்குத்து காடு என்ற பெருமையை இந்த அப்பார்ட்மென்ட்கள் பெறுகின்றன. 14 அடுக்கு மாடி கொண்ட இந்த செங்குத்து காடு அப்பார்ட்மென்டில், 56 வீடுகள் மட்டுமே உள்ளன. அந்த அளவுக்கு வசதியாக அனைத்து அப்பார்ட்மென்ட்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பில் மொத்தம், 225 மரங்கள், 2 வருடங்களுக்கும் மேற்பட்ட 1000 தாவரங்கள், 2500 செடிகள் மற்றும் 350 மீட்டர் பூந்தொட்டிகள் உள்ளன. தானியங்கி முறையில் அனைத்து செடிகளுக்கும், சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 படுக்கை வசதி கொண்ட வீடுகள், (2431 – 2592 சதுர அடி.), 4 படுக்கை வசதி கொண்ட வீடுகள் (3060 – 3323 சதுர அடி) என்ற அளவுகளில் கிடைக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லேட்ன்ட்ஸ்கேப் பால்கனிகள் உண்டு. 3 பெட் வசதி கொண்ட வீடுகள், ரூ.1.76 கோடி விலையில் ஆரம்பமாகின்றன. 4 பெட் வசதி கொண்ட வீடுகள், 2.2 கோடி விலையில் ஆரம்பமாகின்றன. நமது நேரத்தில், கிட்டத்தட்ட 90% புதிய காற்று அல்லது பசுமை சூழல் இல்லாமல் வீட்டிற்குள்தான் செலவிடுகிறோம். வீட்டின் உட்புற காற்று ஐந்து மடங்கு அதிகமாக மாசுபடுத்தப்படலாம் என்கிறார்கள். இது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். சூரிய வெளிச்சம் மற்றும் பசுமை இல்லாமை நம் மனநிலைக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நாம் வாழும் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். நமது வீடுகள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் திறந்தவெளி இடங்களாக மாற வேண்டும். இதுதான் மனா ஃபாரெஸ்டாவை வித்தியாசமாக வடிவமைக்கும் யோசனைக்கு வழிவகுத்தது. வெளிப்புறங்களை வீட்டிற்குள் கொண்டு வரும் வீடு மனா ஃபாரெஸ்டா.

137 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *