தமிழ் சினிமாவின் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் உருவாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.
மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, கன்னட திரைப்படமான பப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கூடி விரைவில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில் சிலம்பரசன் வீட்டின் முன்பு ரசிகர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தற்போது ரசிகர் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தால் ரசிகர்கள் நிரந்தர முடிவை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், சிம்பு ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவரை மாற்ற கோரியும் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
27 Views