

ராஜத பாஸ்மா திரவத்தை பயன் படுத்தி கிருமி நாசினி சுரங்கப்பாதை கோயம்பேடு காய்கனி அங்காடியில் தொடங்கப்பட்டது. உலகின் முதல் ஆயுர்வேத கிருமி நாசினி சுரங்கப்பாதை நானோ லைஃப் உடன் தமிழக அரசு இணைந்து தொடங்கப்பட்டது ரஜத பாஸ்மா திரவம் தரம் செயல்திறன் பாதுகாப்பு என்ற முற்றிலும் ஆகச் சிறந்தது, பக்க விளைவுகள் இல்லாதது, பல்வேறு பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகளிடமிருந்து 99% பாதுகாப்பு அளிக்க வல்லது. இதன் உற்பத்தி முறைகளில் எந்த விதமான ரசாயனங் களோ ஆல்கஹாலோ பயன்படுத்துவதில்லை என்று தீபக் அபய ஸ்ரீமான் தொடங்கிய தன்வந்திரி நானோ ஆயுஷாதி தனியார் நிறுவனம் ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொடக்கநிலை நிறுவனமாகும். ரஜத பாஸ்மா கிருமிநாசினி திரவம் 100% வெள்ளி துகள்களால் ஆனது. வெள்ளி தயாரிப்பிற்கு ஆயுஸ் துறையிலிருந்து முறையாக உரிமத்தையும் இது பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளாக வெள்ளி துகள்கள் சக்திவாய்ந்த கிருமிநாசினியாக அறியப்பட்டுள்ளது .வெளி சிறந்த நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் வாய்ந்தவையாக உலகளவில் ஏற்கப்பட்டுள்ளன . தன்வந்திரி நானோ ஆயிஷாதியின் மூலம் குறைந்த விலையில் நானோ துகள்களை உற்பத்தி செய்ய முடியும். கிருமிநாசினி சுரங்கத்தில் பயன்படும் நானோ லைஃப் பாதுகாப்பு செயல்திறன், தரம், என்ற இரண்டு நிலைகளிலும் 100% மற்றும் தரச்சான்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.