சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலைக்கு மேல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாராயணசாமி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசிடமிருந்து இவ்விரு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார். பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு மற்றும் நலம் ஆகியவற்றுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்பதால் ஏழு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல புயல் பாதித்த மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயலின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு நரேந்திர மோடி முதல்வர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

133 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *