வாஷிங்டன்: இந்த ஆண்டு அதிக மக்களால் தேடப்பட்ட வார்த்தை கொரோனா தொற்று என்று மெரியம் வெப்ஸ்டர் என்ற இணையதள அகராதி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி என கொரோனாவை தொற்று என அறிவித்தபோது, கோடிக்கணக்கான மக்கள் அந்த வார்த்தையை தேடியதாக மெரியம் வெப்ஸ்டர் கூறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இணையதள அகராதி நிறுவனமான மெரியம் வெப்ஸ்டர் , தனது நிறுவன அகராதியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக தேடப்படும் வார்த்தையை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டில் அந்த அகராதியில் கொரோனா தொற்று(பாண்டமிக்) என்ற வார்த்தையை அதிகம் பேர் தேடியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் கூறியதாவது:

உலகம் முழுவதும் கால் பதித்துள்ள கொரோனா முதன் முதலாக கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. கடந்த மார்ச் மாதம் அது விஸ்வரூபம் எடுத்தபோது, மார்ச் 11-ஆம் தேதி அதனை பெருந்தொற்று(பாண்டமிக்) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அந்த நாளில் மட்டும் உலகம் பல கோடிக்கணக்கான மக்கள் இந்த வார்த்தையை தேடி பார்த்தனர். அதாவது 2019-ல் இதே மார்ச் 11-ஆம் தேதியை விட 2020 மார்ச் 11-ல் சுமார் 115,806% அதிகம் அளவுக்கு இந்த வார்த்தை தேடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பாண்டமிக்(pandemic) என்பது கிரேக்க வார்த்தையாகும். pan என்பது அனைத்து அல்லது ஒவ்வொன்று, demic என்பது மக்கள் என்பதை குறிக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. சில நேரங்களில் ஒரு சொல் ஒரு சகாப்தத்தை வரையறுக்கிறது. இந்த கடினமான இந்த ஒரு சொல் உடனடியாக முன்னணிக்கு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ல் இந்த அகராதியில் அவர்கள் என்ற வார்த்தை அதிகமாக தேடப்பட்டுள்ளது. 2018ல் நீதி என்ற வார்த்தையும், 2017-ல் பெண்ணியம் என்ற வார்த்தையும் அதிகமாக தேடப்பட்டுள்ளன.

135 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *