பெங்களூர்: இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ தேர்வுக்குழு விதித்த கெடு இன்றோடு முடிகிறது. ரோஹித் சர்மா இன்று தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டும். இந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரர் ரோஹித் சர்மா. ஆனால் இவர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் கலந்து கொள்ளவில்லை. தொடையில் இவருக்கு காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
நிலை என்ன
இவர் ஆஸ்திரேலிய தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் இன்று தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டும். தனது காயம் சரியாகிவிட்டது. உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ரோஹித் சர்மா இன்று பிட்னசை நிரூபிக்க வேண்டும்.
பிட்னஸ்
இவருக்கு இன்று காயத்திற்காக ஸ்கேன் எடுக்கப்படும். அதேபோல் இவரின் உடல் பிட்னஸை சோதனை செய்வதற்காக இன்று யோ யோ டெஸ்ட் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படும். இன்று மதியத்திற்குள் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது.
கெடு
அந்த கெடு இன்றோடு முடிகிறது. இதனால் இன்று ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் சோதனை நடக்க சில வாரங்கள் ஆகும். அதற்குள் ஆஸ்திரேலிய தொடர் முடிந்து இங்கிலாந்து தொடர் தொடங்கிவிடும்.
கட்டாயம்
இதனால் இன்று பிட்னஸை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். இன்றைய தினம்தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் கெரியரை தீர்மானிக்க போகிறது. இதனால் இன்று அவர் சிறப்பாக செயல்பட வேண்டும்.