சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணி போராடி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் அதிரடியாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் இதுவரை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்திய நிலையில் தற்போது இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.

தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா

ஆனால் அதன்பின் இந்திய அணியின் பேட்டிங் அவ்வளவு சரியாக இல்லை. முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடக்கத்தில் அதிரடியாக ஆடி வந்த இந்தியா அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. இந்திய அணியிலும் வரிசையாக பல வீரர்கள் காயம் அடைந்தனர் .

மோசம்

ஒரு பக்கம் பண்ட் காயம் அடைந்து பெவிலியன் திரும்பினார். அதேபோல் ஜடேஜாவும் காயம் அடைந்து வெளியேறினார். தற்போது பண்ட் காயத்தில் இருந்து விடுபட்டுள்ளார். ஆனால் ஜடேஜா இன்னும் முழுமையாக திரும்பவில்லை.

திணறல்

அதன்பின் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறியது. இந்த நிலையில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா ஸ்கோரை எடுக்க முயன்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

ரோஹித்

இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ரோஹித் அரை சதம், பண்ட் 97 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்கள். தற்போது புஜாரா, விஹாரி களத்தில் உள்ளனர். 4 விக்கெட்டிற்கு இந்தியா 250 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற இன்னும் 157 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

124 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *