சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள் ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும்.
நான்காவது டெஸ்ட்
இரண்டு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. பெரிய அளவில் பயிற்சி இன்றி இந்திய அணி இந்த போட்டியில் ஆட உள்ளது. பிரிஸ்போனில் ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்த முடியாது.
கட்டாயம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள் ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். நான்காவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆடுவது உறுதியாகிவிட்டது. இவருக்கு முதுகில் பிரச்சனை இருந்தாலும் ஓய்விற்கு பின் இவர் களமிறங்க ரெடியாகிவிட்டார்.
ரெடி
அதேபோல் ஜடேஜாவிற்கு பதிலாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜாவிற்கு இணையான சுந்தர் பவுலிங் செய்வார். இவரின் பேட்டிங்கும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால் இவர் களமிறக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். பும்ராவிற்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் களமிறங்க வாய்ப்புள்ளது.
வாய்ப்பு
இன்னொரு பக்கம் சைனிக்கு பதிலாக இந்திய அணியில் நடராஜன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பும்ரா போல யார்க்கர் பவுலிங் போட ஆள் தேவை என்பதால் நடராஜன் களமிறக்கப்படுவார் என்று கூறுகிறார்கள். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள் ஆட வாய்ப்புள்ளது.