சிட்னி: இந்திய அணியில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா அணியில் இடம்பெறாத நிலையிலும் கூட அணிக்குள் பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் சேஸ் செய்வது கடினம் என்பதால் இந்தியா இரண்டாவது பேட்டிங் இறங்கும் போது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

மாற்றம்

இந்த நிலையில் இந்திய அணியில் மிக முக்கியமான மாற்றங்கள் இன்று செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 7 பேட்ஸ்மேன்கள் உடன் இந்தியா களமிறங்கி உள்ளது. இரண்டு பேர் ஆல்ரவுண்டர் என்றாலும்.. அவர்கள் இருவருமே மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்ய கூடிய வீரர்கள்தான்.

நிலைமை எப்படி

அதன்படி ஓப்பனிங் வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் தவான் இடம்பெறுகிறார். அதன்பின் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுகிறார்கள். இவர்களுக்கு பின்புதான் கே.எல் ராகுல் பேட்டிங் இறங்குகிறார். கே. எல் ராகுல் எல்லா இடத்திலும் இறங்கி ஆடும் திறன் கொண்டவர் என்பதால் அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பேர்

கே. எல் ராகுலுக்கு அடுத்து பாண்டியா, ஜடேஜா என்ற இரண்டு ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கடந்த உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாமல் இந்தியா மோசமாக திணறியது. இந்தியா செமி பைனலில் தோல்வி அடைய இதுவே காரணமாக இருந்தது.

மாற்றம்

இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் என்ற இரண்டு வீரர்களை களமிறக்கி உள்ளது. பொதுவாக கோலி இப்படி துணிச்சலாக அணியில் மாற்றம் செய்ய மாட்டார். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்வதை விரும்பும் கோலி இந்த முறை கொஞ்சம் தைரியமான முடிவை எடுத்துள்ளார்.

இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாஸ் வலிமை பெற்றுள்ளது. பிசிசிஐ தலைவராக கங்குலி வந்த பின் இப்படி முக்கியமான மாற்றங்கள் இந்திய அணியில் செய்யப்பட்டு வருகிறது. புதிய வீரர்கள் உடனுக்குடன் அணியில் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

89 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *