பாக்சிங் நாள் (Boxing Day), அல்லது பொக்சிங் நாள் திசம்பர் 26 அல்லது தேசிய / வட்டார சட்டங்களுக்கிணங்க கிறித்துமசு நாளுக்கு அடுத்த முதல் அல்லது இரண்டாவது வேலைநாள் அன்று வழங்கப்படும் வங்கி விடுமுறை நாள் அல்லது பொது விடுமுறை நாள் ஆகும். இந்த விடுமுறை பெரிய பிரித்தானியா, ஆத்திரேலியா, கனடா, நியூசிலாந்து, மற்றும் வேறுசில பொதுநலவாய நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில் ஒரே சட்டத்தின் கீழ் – வங்கி விடுமுறைகள் சட்டம் 1871- இந்த விடுமுறை வழங்கப்பட்டாலும் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, வேல்சு அடங்கிய பெரிய பிரித்தானியாவில் கிறித்துமசிற்கு அடுத்த நாள் பாக்சிங் நாள் என அழைக்கப்பட்டாலும் அயர்லாந்தில் இது புனித ஸ்டீபன் விருந்து நாளாக வரையறுக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்தில் மட்டுமே திசம்பர் 26க்கு மாற்றாக மாற்று வங்கி விடுமுறை விடப்படக்கூடும்; இது புனித ஸ்டீபன் நாளை பாக்சிங் நாளைப் போலன்றி தானாக அடுத்த திங்கட்கிழமைக்கு மாற்றவியலாது என்ற சட்டச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு உள்ளது.

அயர்லாந்தில் இது புனித ஸ்டீபன் நாளாக (ஐரிய மொழி: Lá Fhéile Stiofáin) அல்லது ரென்னின் நாளாக (ஐரிய மொழி:Lá an Dreoilín}}) என அழைக்கப்படுகின்றது.

தென் ஆபிரிக்காவில், பாக்சிங் நாள் 1994ஆம் ஆண்டு முதல் நன்மதிப்பு நாளாக பெயரிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து, லித்துவேனியா, ஆஸ்திரியா, செருமனி, எசுக்காண்டினாவியா மற்றும் போலந்தில் திசம்பர் 26 இரண்டாம் கிறித்துமசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

கனடாவில் திசம்பர் 26 பாகசிங் நாளாக அறிவிக்கப்பட்டு அன்று அனைத்து தொழிலாளர்களும் ஊதியத்துடன் விடுமுறை பெறுமாறு கூட்டமைப்பு சட்டபூர்வ விடுமுறையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

-In English

Boxing Day

Boxing Day is a holiday celebrated the day after Christmas Day, thus being the second day of Christmastide.[1] It originated in the United Kingdom and is celebrated in a number of countries that previously formed part of the British Empire. Boxing Day is on 26 December, although the attached bank holiday or public holiday may take place either on that day or one or two days later.

In parts of Europe, such as Romania, Hungary, Germany, Poland, the Netherlands, the Czech Republic, Catalonia and Scandinavia, 26 December is celebrated as a second Christmas Day.

150 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *