ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.

சளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்

பிராணாயாமங்கள்ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.

பஸ்திரிகா பிராணயாமம்

தரையில் ஆசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து, முதுகு போன்றவற்றை நேராக வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கைகளை நேராக வைத்துக்கொண்டு இரு நாசித்துவாரங்களின் வழியாக வேகமாக மூச்சை உள்ளிழுத்து, வேகமாக வெளியே விட வேண்டும். இப்படி ஒருவேளைக்கு 10 முறை செய்ய வேண்டும். இதைச் செய்வதால், நெஞ்சில் கட்டியாக இருக்கும் சளி மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கு அடைத்துக்கொண்டு சுவாசிக்கச் சிரமப்பட்டு, வாயால் சுவாசிப்பவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் நல்ல பலன் பெறலாம். இவை நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும்.

நாடி சுத்தி பிராணயாமம்

வலது கை ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் மடித்து வைத்து, வலது நாசியில் கட்டை விரலும், இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும். இடதுபக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலப்பக்க நாசியின் வழியாக வெளியேவிட வேண்டும். பிறகு வலது பக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியேவிட வேண்டும். இதேபோல் 20 முறை செய்யலாம். இந்தப் பயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். மனதை ஒருநிலைப்படுத்த உதவும். இதை எல்லா வயதினரும் செய்யலாம்.

பிராமரி பிராணயாமம்

இரண்டு கையின் ஆள்காட்டி விரலைக் கொண்டு அதனதன் பக்கம் உள்ள காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிடும்போது `ம் கார…’ (M kara) என்று உச்சரிக்க வேண்டும். இதேபோல் 10 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், அடிக்கடி தொண்டையில் வரும் தொற்றுகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொண்டை கரகரப்பாக இருப்பது, தொண்டையில் சளி அடைத்துக்கொள்வது போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சூரிய நமஸ்காரம், மர்ஜரி ஆசனம், வியாகராசனம், பர்வதாசனம், ஷாஷங்காசனம், பத்மாசனம் போன்ற யோகா பயிற்சிகளைச் செய்யலாம். இந்த யோகாசனங்களை சுவாசக் குறைபாடுகள், நுரையீரல் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் செய்யலாம். இந்த ஆசனங்கள் உடலை வலிமையாக்கவும் உதவும்.

Related Tags :

பிராணாயாமம் |Pranayama |Yoga

அண்மை – உடற்பயிற்சி

ஆஸ்துமா பிரச்சனையை குறைக்க உதவும் எளிய கிரியா பயிற்சிகள்

251 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *